“
“நான் இப் பிரச்சினைகள் இருக்கும் மாகாணத்திற்குள் வாழ்ந்தாலும் அவைகளைப் பற்றி பெரிதாக யாரும் பேசுவதில்லை. இவ்வாறு என் கள விஜயத்தின் போது தனது பூர்வீகத்தை நிலத்தை இழந்து தவிக்கும் மக்களுடன் நேரடியாக உரையாடினேன். அப்போது அவர்கள் பகிர்ந்து கொண்ட பல வேதனையான உண்மைச் சம்பவங்களும் அதனால் ஏற்பட்ட உடல், உளஇ பொருள் சேதமும் அதற்காக நீதிக்கான போராட்டமும் அதனால் ஏற்பட்ட பல இடர்களையும்; என்னுடன் பகிர்ந்து கொண்ட போது அந்த சம்பவங்கள் என்னையும் கண் கலங்க வைத்தது.”
