“
“அட்டைகள் உறுஞ்சிய இரத்தக்கசிவுடனான கால்களுடன் அங்கே என்னை சந்தித்த ஒரு அண்ணன் சொன்னார். “எங்களுக்கு எதுவுமே தேவலைங்க நம்ம வீட்டு புள்ளைங்கள நல்லா படிக்க வெச்சா அதுவே போதும், ஆனா அதுக்கு கூட எங்க கிட்ட எந்த வசதியும் இல்லைங்க”
என்ற அந்த வார்த்தைகளில் இருந்து வாழ்ந்து கொண்டிருக்கும் மற்றும் வாழப்போகும் தலைமுறையினரின் எதிர்காலம் பற்றிய பயம் தெளிவாய் தெரிந்தது எனக்கு. தொடர்வலி சுமக்கும் மலையகம் மாற வேண்டும்.”
