இராணுவம் எங்களை எப்போதும் கண்காணித்து வருகிறது – கதீஜா

Khadija LG

இது எங்கள் வாப்பா உம்மா தந்து விட்டுப் போன இடம்.நாங்க வளர்ந்ததும் இங்கு தான் 60 வயது வரை இங்குதான் இருக்கின்றேன்.எங்களுடன் பக்கத்தில் வந்து மற்றவர்கள் இருப்பதற்கான நிலைப்பாடு இல்லை.ஏனெனில் அவர்களின் நிலங்களை இராணுவம் அபகரித்துள்ளது.இராணுவம் எங்களை எப்போதும் கண்காணித்து வருகிறது.இவற்றால் எங்களுக்கு பிரச்சினைகள் தான். எங்களால் இவ்விடத்தில் எதுவும் செய்ய இயலாத ஒரு நிலையில் காணப்படுகின்றோம். 

வாழ்வாதாரவம் மிகவும் கடினமான நிலையில் உள்ளது. அடிப்படை வசதிகள் ஒன்றுமே இல்லை. காணியில் பயிரிட கூட  முடியாது. யானை பிரச்னையின் நிமித்தம் எங்களால் பயிர் சாகுபடி செய்ய முடியாமல் இருக்கிறது.எவ்வளவு காவல் போட்டாலும் யானை வந்து தாக்குகின்றது.எங்கள் காணியை இராணுவம்  எடுத்தார்கள் என்றால் எங்களுக்கு போவதற்கு வேறு இடமே இல்லை. எந்த பிரச்சனையும் வந்தாலும் இங்கு தான் நாங்கள் இருந்து வசிக்க வேண்டும். ஏனென்றால் இது எங்கள்ளுடைய நிலம்.”

கதீஜா
ஆலிம் சென்னை, அம்பாறை

Similar Posts

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன