எங்கள் கோரிக்கை இவ்விடத்தில் இருக்கும் இராணுவம் இடத்தை விட்டு வெளியேற வேண்டும் – யு.டு சுவைதா

U.T. Suwaitha

69 பேரின் காணிகள் இவ்வாறு இராணுவத்தினால் பறிக்கப்பட்டுள்ளது. எங்கள் நிலங்களில் இருந்து துரத்தப்பட்ட பின்னர் நாங்கள் இங்கு வாழ்ந்து வருகிறோம்.இங்கு வசிக்கும் எங்களுக்கு பல பிரச்சினைகள் காணப்படுகின்றன அதில் முக்கியமானவைகளாக யானை பிரச்சனை.மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் நாம் வாழ வேண்டியுள்ளது. இரவு வேலைகளில் வீடு வந்து உறங்குவது கூட மிகவும் கடினம் யானை பயத்தின் நிமித்தம்.தற்போது நாங்கள் ஒரு சிறிய குடிலை அமைத்து அதற்குள்ளே நாங்கள் வாழ்ந்து வருகின்றோம். இவ் குடிலை கூட யானைகள் இரவில் வந்து அதனையும் உடைக்கின்றது. நாம் முன்பிருந்த காலத்தில் இப்பிரதேசத்தில் யானைகள் பொதுவாக வருவதில்லை அதன்பிறகு அமைக்கப்பட்ட குப்பை தோட்டத்தினால் யானைகள் தொடர்ச்சியாக இங்கு வருகின்றது அது மட்டுமல்லாமல் இவ்விடத்தில் தொடர்ச்சியான துர்நாற்றம் இருப்பதால் உணவுகளை சமைத்து சாப்பிடுவதில் கூட மிகவும் கஷ்டமான நிலையில் உள்ளது. 

பெண்களுக்கான பாதுகாப்பான மலசலகூட வசதி இன்மை,தொடர்ச்சியான நீதிமன்ற வழக்குகள் போன்ற பிரச்சினைகள்ளுக்கு நாங்கள் முகம்கொடிக்கிறோம்.

எங்கள் கோரிக்கை இவ்விடத்தில் இருக்கும் இராணுவம் இடத்தை விட்டு வெளியேற வேண்டும். இவ்வாறு வெளியேறினால் மாத்திரமே மக்கள் இவ்விடத்தில் மீண்டும் வந்து குடி ஏற முடியும்.அப்படி குடியேறினால் தான் எங்களுக்கான பிரச்சனை குறையும் இந்த யானை பிரச்சினையும் குறையும். இராணுவம் இருக்கும் பகுதிகளில் யானை வந்தால் அவைகளை எங்கள் பக்கம் திருப்பி விரட்டி விடுகிறார்கள். இதனால் எங்களுக்கு எந்த வாழ்வாதாரத்தையும் செய்ய முடியாது. இருப்பினும் எங்கள் காணி எங்களுக்கு பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே இங்கு நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.

யு.டு சுவைதா
ஆலிம் சென்னை, அம்பாறை

Similar Posts

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன