மயிலத்தான் மடு மாதவன் பிரதேசத்தில் பண்னையாளர்களின் நாலரை லட்சம் கால்நடைகளும் 3200 பண்ணையாளர்கள் அவ்விடத்தில் இருந்து. கால்நடைகளை பராமரித்து வந்தார்கள். 3200 பேர் என்று சொன்னால் அது 980 பண்ணையாளர்களும் மீதி யானவர்கள் அவர்களின் வேலையாட்களாகவும் கூலியாக்களாகவும் வாழ்ந்து வந்தார்கள். எங்களுக்கு 2011 ஆம் ஆண்டு அத்து மீறிய குடியேற்றத்தினால் அம்பாறை மாவட்டத்தில் உள்ள மஹாஓயா, அரகன்விலா, மற்றும் பொலன்னறுவையில் உள்ள தெஹியத்தகண்டிய என்ற பகுதிகளில் இருந்து சிங்களவர்கள் இங்கு வந்து இடங்களை ஆக்கிரமித்தார்கள்.மேய்ச்சல் நிலங்களாக சட்டபூர்வமாக ஒதுக்கப்பட்ட மேய்ச்சல் நிலங்களை இந்த சிங்கள குடியேற்றக்காரர்கள் ஆக்கிரமித்துள்ளனர். காடு மற்றும் மேய்ச்சல் நிலங்களுக்கு தீ வைப்பதுடன், கால்நடைகளை கொன்று எங்களையும் தாக்கி வருகின்றனர்.அவ்வாறு குடியேற்றப்பட்டவர்கள் பெரும்பாலான ராணுவத்தில் ஓய்வு பெற்றவர்கள், மற்றது ராணுவத்தில் இருந்து விலகிச் சென்றவர்கள். மகாவலி அதிகார சபை ஏறாவூர் நீதிமன்றத்திலும் மட்டக்களப்பு நீதிமன்றத்திலும் வழக்கு தாக்கல் செய்தது. அவ்விடத்தில் இருந்த அத்தனை பேருடைய வீடுகளை உடைத்து அங்கிருந்தவர்களையும் அவ்விடத்தை விட்டு வெளியேற்றினார்கள்.
இதனை தடுப்பதற்கு பல வழிகளை நாங்கள் முயற்சித்தோம் ஆனால் அவைகள் எதுவும் எங்களால் முடியாமல் போனது. 2020.12.10 திகதி அதாவது சர்வதேச மனித உரிமை தினம் தினத்தன்று பண்ணையாளர்களும் சில சட்டத்தரணிகளும் இணைந்து மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல்செய்தார்கள். அந்த ரிட் மனு ஊடாக எங்களுக்கு கொஞ்சம் ஆறுதல் கிடைத்தது. அத்துமீறி குடியேறியவர்களை வெளியேற்றுவதற்காகவும் அரசு அதிகாரிகள் தனது கடமைகளை சரி வர செய்யவில்லை என்று காரணம் காட்டி வழக்கு பதிவு செய்யப்பட்டது. மகாவலி அதிகார சபை இவர்களை நாங்கள் வெளியேற்றுகின்றோம் என்று சொன்னது.
அந்த வகையில் 2023 ஒன்பதாம் மாதம் அன்று நாங்கள் அறவழிப் போராட்டத்தை தொடங்கினோம். எங்களுக்கு யாரும் உதவி செய் இல்லை இன்றுடன் 211 நாளாக எங்கள் போராட்டம் தொடர்கிறது.2024.03.24 திகதி மகாவலி அதிகார சபையின் அமைச்சர் அவர்கள் எங்களை அழைத்து எங்களை அழைத்து எங்களுடைய பிரச்சினை என்ன என்று கேட்டு எங்களுடைய ஒன்பது கோரிக்கைகளை கொடுத்தோம்.கடைசியாக எங்களிடம் இவர்கள் கேட்டது அறவழி போராட்டத்துக்குள் கூடாரத்தை எப்போது நீங்கள் எடுப்பீர்கள் என்று. இதுவரைக்கும் 4800 கால்நடைகள் இழக்கப்பட்டிருக்கின்றது.இதனால் எங்களுடைய தேசிய பால் உற்பத்தி 60 வீதம் அளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளது.ஏனென்றால் மயிலத்தான் மாதவன் மடுவில் மட்டும் ஒரு நாளைக்கு 6000 லிட்டர் பால் உற்பத்தி செய்து கொடுக்கின்றோம். இங்கு கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயம் செய்து வாழ்ந்து வருகிறோம். இப்பிரச்னைக்கு அதிகாரிகள் நிரந்தர தீர்வு காணும் வரை எங்களின் அமைதியான போராட்டத்தை தொடருவோம்.
பால் பண்ணையாளர்கள்
மயிலத்தமடு
