காணி உரிமையை பார்க்கும்போது நாங்களே சுயமாக முடிவெடுத்து எங்கள்  நிலத்தில் வீடு கட்ட முடியாமல் இருக்கின்றது – தங்கவேல் சித்திரவேல்

Thangavel Chitravel -Kandapola

நான் ஒரு சமூக சேவையாளராகவும், 20 வருட காலமாக யூனியன் லீடராகவும் செயலாற்றி வருகின்றேன். இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகை தந்து 200 வருட காலமாகின்றது. ஆயினும் எங்களுக்கு பெரும்பான்மை சமூகத்தை பார்க்கையில் அவர்களுக்கு இருக்கின்ற முறையான அடையாளம், விலாசம் எங்களுக்கு இல்லை.இந்த நாட்டின் வருமானத்தில் முதன்மையாக இருக்கின்ற தேயிலை உற்பத்தி செய்கின்றவர்கள் நாங்கள் . இருப்பினும் எங்களுக்கு முறையான வருமானம் கிடைப்பதே இல்லை அத்தோடு இன்றுவரை முகவரி என்பது எங்களுக்கு இல்லை. எங்களை இந்திய தமிழர் என்று அழைக்கின்றனர். ஆனால்  எங்களை மலையக தமிழர் என்று அடையாளப்படுத்துவதை நாங்கள் விரும்புகிறோம். காணி உரிமையை பார்க்கும்போது நாங்களே சுயமாக முடிவெடுத்து எங்கள்  நிலத்தில் வீடு கட்ட முடியாமல் இருக்கின்றது. அதற்கு பிரதான காரணமாக இருப்பது நாட்டின் ஆட்சியாளர் மற்றும் தோட்ட முகாமைத்துவமுமே. எங்களை ஒரு கட்டமைப்பிலேயே நடத்துகின்றது. 99 வருட குத்தகையின் பெயரில் பெருந்தோட்டம் அவர்களின் அடிமைத்தனத்திலேயே இருக்கின்றது. இன்றைய காலத்தில் இளைஞர் யுவதிகள் சுய தொழில் ஒன்றினை செய்வதற்கு விரும்புகின்றனர். உயர் கல்வியைப் பெற்றாலும் வேலை வாய்ப்பு உரிய கல்விக்கு கிடைப்பதில்லை. எனவே சுயதொழில் செய்வதன் மூலம் வாழ்வாதாரத்தை மேம்படுத்தலாம் என்ற எதிர்பார்ப்பு அவர்களிடையே பெரும்பாலும் இருக்கின்றது. இதனால் எங்கள் பிள்ளைகள் எஸ்டேட்டில் வேலை செய்யாததால் எங்களுக்கு வாழ வீடு இல்லை. எங்களிடம் எங்கள் நிலத்திற்கான பத்திரம் இருந்தால், எங்கள் குழந்தைகள் தோட்டங்களில் வேலை செய்யாவிட்டாலும், தற்போதைய வீட்டை விட்டு வெளியேற வேண்டிய அவசியமில்லை.

மற்ற சமூகங்களுடன் ஒப்பிடும் போது நாமும் இந்த நாட்டின் குடிமக்களாகவே கருதப்படுகிறோம், ஏனெனில் நமக்கு வாக்களிக்கும் உரிமை உள்ளது.பிறகு இந்த நாட்டின் பிற குடிமக்கள் இருக்கும் வீட்டு முகவரி ஏன் எமக்கு மட்டும் இல்லை? நாங்கள் பெறும் தினக்கூலி ரூபாய் 900. அதில் நான்கில் ஒரு பங்கு யூனியனுக்கு செல்கிறது, மீதமுள்ள பணம் நமது அன்றாட வாழ்க்கைக்கு போதுமானதாக இல்லை.

தங்கவேல் சித்திரவேல்
ட்ரெய்ட்டன் தோட்டம்

Similar Posts

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன