எனது மாதச் சம்பளச் சீட்டைப் பாருங்கள், ரூ.2200 மற்றும் தான் வழங்கப்படுகின்றது  எங்களுடைய மின்கட்டணம் ரூ1200 – ரவீந்திரன்

Ravindran MTC

நாங்கள் ஐந்து பேர் இருக்கிறோம். எனது மனைவி தோட்டத்திற்கு வேலைக்கு செல்கிறார். நான் இங்கே உள்ள தனியார் மரக்கறி தோட்டத்திற்கு வேலைக்கு செல்கிறேன். வருமானம் என்று சொல்லும் போது அன்றைக்கன்று உழைப்பு மட்டும்தான். வேலைக்கு சென்றாள் 1500 ரூபாய் தருவார்கள் அதில் பஸ் போக்குவரத்துக்கு 500 ரூபாய் செலவழியும் மிச்சம் ஆயிரம் ரூபாயைத்தான் கொண்டு வருவோம் வீட்டுக்கு.எனது மாதச் சம்பளச் சீட்டைப் பாருங்கள், ரூ.2200 மற்றும் தான் வழங்கப்படுகின்றது  எங்களுடைய மின்கட்டணம் ரூ1200. நாங்கள் எப்படி உயிர்வாழ்கிறோம் என்று உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?

இங்கு எல்லாமே பிரச்சனையே. ஒரு மருத்துவ வசதிக்கு செல்வதென்றாலும் ரொம்ப கஷ்டத்தின் மத்தியில் தான் போவோம். வீதி வசதியோ, வைத்தியசாலை வசதியோ, டாக்டர் வசதியோ இந்த எஸ்டேட்டில் இல்லை.ஒரு மருத்துவச்சியை  சந்திப்பது என்றாலும் மேல்மலையில் உள்ள அலுவலகத்திட்கு தான் போக வேண்டும். அங்கு போனாலும் கும்பிட்டு கூத்தாடி தான் அவர்களிடமிருந்து வேலைகளை பெற்றுக்கொள்ள வேண்டும்.மருந்தகம் இப்போது மூடி தான் கிடக்கின்றது முதலில் இருந்தது இப்போது இல்லை.கர்ப்பிணி தாய்மார்கள் கூட சுகாதார வசதிக்காக 5 கிலோமீட்டர் நடந்து தான் சுகாதார வசதி நிலையத்துக்கு செல்ல வேண்டும்.
 
நாங்கள் வசிக்கும் வீட்டுக்கு கூட எந்த ஆதாரமும் இல்லை. நாளை யாராவது அதிகாரத்தில் இருப்பவர்கள் வந்து  எங்களை இவ்விடத்தை விட்டு போக சொன்னால்  நாங்கள் போய் தான் ஆக வேண்டும்.எந்த உறுதி பத்திரமும் இல்லை. காலாகாலமாக நாங்கள் எல்லோரும் இப்படித்தான் இருக்கிறோம். இந்தப் பிரதேச பிரிவில் 4,500 பேர் இங்கு இருக்கிறார்கள். அரசியல் தலைவர்கள் வோட் பெற்றுக் கொள்ள மட்டும்தான் இங்கு பெரும்பாலும் வருவார்கள். கொஞ்ச வேலையை செய்து தருவார்கள் இங்கிருக்கும் வீதிகளுக்கும் கொங்கிரீட்டு போடுவார்கள் அதுவும் கோவில் விசேஷம் என்றால் மட்டும் தான் வருவார்கள். எங்களுக்கு வீடு ஒதுக்கப்பட்டிருக்கு என்று சொல்லி கொடியெல்லாம் அடிப்பார்கள் அதன் பின்னர் ஒரு தடயமும் இல்லாமல் மறைந்துவிடுவார்கள் .

ரவீந்திரன் 
கம்பஹா வத்தை, உடுபுஸ்ஸல்லாவ

Similar Posts

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன