சில வேளை நாங்கள் அனுமதி பெற்றாலும் அதை சொந்தம் கொண்டாட முடியாது – தினேஷ் குமார்

Dinesh Kumar MTC

இலங்கை நாட்டை பொருத்தவரையில் மலையக தமிழர்கள் 200 வருடகாலமாக ஓர் வரலாற்றை கொண்டவர்கள் .  பதினான்கு கிராம அலுவலகர் பிரிவுகளை கொண்டு  வாழ்கின்ற நமக்கு அதே நாலடி காம்பிராக்கள். அதே லயன் குடிசைகளிலும், முறையற்ற சுகாதாரமும், கல்வி வசதி, பொருளாதார பிரச்சனை, வறுமை, வேளை வாய்ப்பு இன்மை,  சிறுவர் துஷ்பிரயோரம், சிறுவர்களை வேளைக்கு அமர்த்தல், போதை பொருள் விநியோகம், என்று பல்வேறு துன்ப துயரங்களுடன் வாழ்ந்து வருகின்றொம்.

மனிதன் மரணித்து, அவனை அடக்கம் செய்வதற்கான நிலம் கூட  இல்லாத சமூகமாகவே நாம் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்று ஓர் மலையக இளைஞனாக கானும் போதே “ஆதங்கம்” உச்சம் தொடுகின்றது. கையாலாகாத அரசியல் வாதிகளை காலம் காலமாக நம்பி நாசமாய போனது தான் மிச்சம். அடிப்படை தேவைகள் அல்லது அடிப்படை மாற்றம் எதுவென்று அறியாத தலைவர்களை தொடர் தேர்தல்களில் அறியாசனம் ஏற்றுவதற்கு நாம் தவறியதில்லை. ஆனால் அதற்கு பிரதிபலன் என்னவோ ஏமாற்றம் மட்டுமே….

தேர்தல் காலங்களில் வீட்டை நோக்கி வருவதும் பின் விலாசம் கூட தெரியாமல் மறைந்து விடுவதும்  இவர்களை நம்பி நம் பெரியோர்கள், முன்னோர்கள் “ஏமாந்து போனார்கள் என்பது பரிதாபமே .இங்கே யாராவது இறந்தால் தேயிலை தோட்டத்து நிலத்தில் தேயிலைக் கன்றுகளை அகற்றி 6 அடி ஆழமான குழியை வெட்டுவதற்கு கூட முகாமையாளரிடம் அதற்குரிய அனுமதியை பெறவேண்டும்.எங்களின் சுயமுயற்சியால் வீடு கட்டுவதற்கு, வீட்டை திருத்துவதற்கு ஏன் மலசலகூடம் அமைக்கவேண்டும் என்றால் கூட யாரோ பெயர் தெரியாத ஒருவரிடம் அணுமதி பெறவேண்டிய நிர்பந்தம் . சில வேளை நாங்கள் அனுமதி பெற்றாலும் அதை சொந்தம் கொண்டாட முடியாது. இவ்வாறு சொல்ல்முடியாத அவலங்கள் தொடர்கின்றது.

தினேஷ் குமார் 
கம்பஹாவத்தை, உடுபுஸ்ஸல்லாவ

Similar Posts

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன