வேலைக்குச் செல்லும் நாளில்தான் கூலி கிடைக்கும், நாளொன்றுக்கு 1000 ரூபாய்க்கு 20 கிலோ தேயிலை கொட்டைகளை கட்டாயம் பறிக்க வேண்டும். 20 கிலோவுக்கு குறைவாக எடுத்தால், 500 ரூபாய் மட்டுமே கூலி வழங்கப்படுகிறது. மாதாந்திர அடிப்படையில் 22 நாட்கள் வேலை செய்தால் 14000 மட்டுமே கிடைக்கும். 20 கிலோவுக்கு மேல் எடுத்தால். கூடுதல் கிலோவுக்கு 40 ரூபாய் வழங்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட பருவத்தில் தேயிலை இலைகள் இல்லை என்றால், கட்டாயமாக 18 கிலோ பறிக்க வேண்டும். 3 குழந்தைகளை படிக்க வைப்பதால் தோட்டத்தில் கிடைக்கும் கூலி போதவில்லை. முன்பு மாதம் 22 நாட்கள் வேலை செய்தால் சம்பளம் வழங்கப்படும். ஆனால் தற்போது அது மாற்றப்பட்டுள்ளது. பறிக்கும் தேயிலையின் கிலோவுக்கு ஏற்ப தினசரி ஊதியம் பெறுகிறோம். கடந்த 10 ஆண்டுகளாக சொந்த வீடு கோரி வருகிறோம். தற்போது வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். இங்கு யாராவது இறந்தால், சவப்பெட்டிக்கான பணம் எங்கள் மாத சம்பளத்தில் இருந்து குறைக்கப்பட்ட பணத்தில் இருந்து வழங்கப்படுகிறது.
திருச்செல்வி
கந்தபொல
