சம்பளம் எனும் போது 22இறாத்தல் தேயிலை  பறித்தால்  எங்களுக்கு  1000 ரூபாய்  கிடைக்கும் – மகேந்திரன்

Magendhiran Ayari Estate, Ramboda

இந்திய இலங்கை தற்காலிக குடியுரிமை என்னுடைய  அப்பாவின் காலத்தில் வழங்கப்பட்டது. நான் ஒரு தோட்ட தொழிலாளியாக வேலை செய்தேன்.பங்கு கார்ட் என்பது எங்களுக்கு   வழங்கப்பட்டது.இது நாங்கள் தோட்டத்தில் வேலை செய்வதட்கான அடையலாம்மாக கருதப்பட்டது.எங்களுக்கு இன்னும் காணி உரிமை கிடைக்க வில்லை.அது தொடர்பாக இங்கு வந்து யாரும் பேசியது  கிடையாது .காணி உரிமை இருந்தால்  இந்த வீட்டினைத் திருத்தி அமைக்கலாம்.இது தனியார் கம்பெனிகளுக்கு சொந்தமான லயன் வீடுகள்.அவர்கள்  இதனை அபகரித்தால் நாங்கள் வெளியில் தான் செல்ல வேண்டும்.

இது 10ற்கு 10கொண்ட லயன் அறைகள் இதில் எங்கள் குடும்பத்தில் உள்ள 10 பேரும் வசித்துவருகிறோம் . தோட்டத்தில் வருமானம் போதாத காரணத்தால்  மனைவி 5வருடமாக வெளிநாட்டில் பணிபுரிகிறார்.தற்போது நாட்டில் உள்ள பொருளாதார  பிரச்னையால் எங்களுக்கு  வருமானம் குறைவாகவும் விலைவாசி அதிகமாகவும் இருக்கிறது .சம்பளம் எனும் போது 22இறாத்தல் தேயிலை  பறித்தால்  எங்களுக்கு  1000 ரூபாய்  கிடைக்கும் . கொழுந்து இருப்பதனை பொருத்து இறாத்தல் நிறை மாறுபடும்.எங்கள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க இங்கு யாரும் இல்லை.

மகேந்திரன்
அயாரி தோட்டம், ரம்பொட

Similar Posts

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன