இந்த வீட்டிட்கு வரமுன் நாங்கள் லயத்தில் கூழிக்கு இருந்தோம் . நாங்கள் கூழிக்கு இருந்த வீட்டில் எந்த வசதியும் இல்லை .அங்கு மின்சார மற்றும் மலசல கூடம் வசதிகள் கூட இல்லை . சொந்தமாக காசு கொடுத்து இந்த இடத்தை வாங்கினோம். இது எஸ்டேட் உடைய இடம். இன்னோறுத்தர் வைத்திருந்தார் அவரிடம் பணம் கொடுத்து வாங்கினோம். நாங்கள் கணவன் மனைவியாக இருவரும் தோட்டத்தில் வேலை செய்கிறோம்.நாங்கள் 4 வருடமாக தோட்டத்தில் வேலை செய்கிறோம். எங்களுக்கு தோட்டத்தில் வீடு ஒன்றும் கொடுக்கவில்லை. எங்களுக்கு ஒரு பெண் பிள்ளையும் இரண்டு ஆன் பிள்ளைகளும் உள்ளன. இரு ஆன் பிள்ளைகளும் தோட்டத்தில் வேலை செய்கிறார்கள். பெண் பிள்ளை மட்டும் பாடசாலைக்கு செல்கிறாள். என் இரு மகன்களும் இரண்டு மாதமாக ஒரு தோழிற்ச் சாலையில் வேலை செய்கிறார்கள்.எனது மகன் ஒருவருக்கு சுகம் இல்லை ஆனாலும் அவர் வேலைக்கு செல்கிறார். சின்ன மகன் பாடசாலைக்கு கட்டணம் செலுத்த முடியாததினால் வேலைக்கு செல்கிறார். எங்களுக்கு இப்போதைக்கு தேவையானது இடத்திட்குரிய ஒப்பு , நல்ல மலசல கூடம் மற்றும் எங்களுக்கு போதுமான சம்பளம்.
எஸ்.நாக லோகினி
கம்பஹா வத்த, உடபுஸ்ஸல்லாவே
