எங்களுடைய முதலாவது லயன் குடியிருப்பு மக்கள் வசிக்க முடியாது முடியாத நிலயில் இருந்ததால் எங்களுக்கு அதனை டிரஸ்ட் மூலமாக கட்டி தருவதாக தோட்ட மேற்பார்வையாளர்கள் கூறினார்கள். 2018 ஆண்டு இந்த வேலை தொடங்கப்பட்டது.இப்படி கட்டப்பட்ட வீடுகள் முழுமைப்படுத்தப்படாமல் குறைப்பாடு நிரைய இருக்கின்றது .இந்த வீடுகள் கட்டப்பட்டடாலும் இதற்றுக்குரிய காணி உரிமை எங்களுக்கு இல்லை.எங்களுக்கான வீடுகள் சீரமைப்பு செய்யப்படாமல் இருக்கிறது.மற்றும் மலசலகூட வசதிகளின்றி பல சிக்கல்களுக்குள்ளான பெரியவர் ஒருவரை அண்மையில் அவரின் மகள் வந்து அழைத்துச் சென்றார்.எங்களுக்கு தொழிலின் போது குளவிக்கொட்டு, சுகவீனம் ஏற்படும். நாங்கள் நிர்வாகத்திடம் கேள்வி கேட்பது பயத்திலேயே அமைந்து விட்டது.நாங்கள் உணவு சாப்பிடும் இடம் கொழுந்து நெருக்கும் இடம்,மடுவம், மரத்தடி,பாதைகள்.எனது குழந்தைகளை மடுவத்திலேயே விட்டு செல்கிறேன்.உரிய நேரத்திலேயே குழந்தைக்கு பாலூட்ட செல்ல வேண்டும். 18-20 கிலோவிற்குள் எடுத்தால் 1000 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது.
தனலெட்சுமி
நோனாத்தோட்டம்
