நாங்கள் எங்கள் சொந்த நாட்டில் அடிமை வாழ்க்கை வாழ்கிறோம் – சிவசுப்ரமணியம்

Sivasubramaniam - Ayari Estate, Ramboda

இந்தியாவிலிருந்து நாம் இலங்கைக்கு வந்த போது  தற்காலிக குடிமைகள் என்று  ஒரு பத்திரம் வழங்கப்பட்டது.நமக்கு வீட்டுரிமை கொடுத்திருந்தால் நிச்சயமாக முகவரி ஒன்று வழங்கப்பட்டு வீட்டு இலக்கமும் கொடுக்கப்பட்டிருக்கும்.நமக்கு இதுவரையிலும் சொந்த முகவரிக்கூட இல்லை.நமக்கு தோட்ட நிர்வாக முகவரிக்கு தான் கடிதங்கள் வருகின்றன.எல்லாம் அரசியல்வாதிகளின் கீழ் தான் இருக்கிறது,அவர்கள் நினைத்தால் சம்பளத்தை கூட்டலாம்.

தனியார் நிறுவனங்களுக்கு  மூலம் சுகாதார திட்டங்கள் இடம் பெற்றது.அதன் பிறகு கைமாற்றப்பட்ட நிறுவனங்கள் மூலம் எவ்வித சுகாதார செயட்பாடுகளும் இல்லை.இங்கு  வெளியில் சென்று வேலை புரியும் நபர்களே அதிகம்.கிடைக்கப்பெறும் வீட்டு திட்டங்கள் கூட வசதியானோர்க்கு மாத்திரம் கிடைத்தால் ஏனையோர் என்ன செய்வது . மற்றும் தற்போது 3 நாட்களுக் அதிகம் மருத்துவ  விடுமுறை எடுத்தால் பெண்கள் பணிநீக்கம் செய்யப்படுகின்றனர்

எந்த அமைச்சர்களும் மலையக தமிழரை குறித்து பேசுவது கிடையாது காரணம் நம்மை அடிமைகளாகவே வைத்திருக்க வேண்டும் என்பது இவர்களுடைய எண்ணம் .நாங்கள் எங்கள் சொந்த நாட்டில் அடிமை வாழ்க்கை வாழ்கிறோம்.

சிவசுப்ரமணியம் 
அயரி இறம்பொட

Similar Posts

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன