இராணுவம் வேண்டுமென்றே எமது பகுதியின் வியாபாரத்தை சீர்குலைப்பதாகும் – சத்தியசீலன்
முத்தையன்காடு பகுதியில் எனது ஒன்றரை ஏக்கர் காணி இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.நாங்கள் சிறுவயதிலிருந்தே அந்த காணியில் சிவப்பு வெங்காயம், பச்சைமிளகாய் பயிரிட்டுள்ளோம்.இராணுவத்தின் அனுமதியுடன் எனது காணியை பார்வையிட்டேன்.என்னுடைய நிலத்தில் முகாமின் சமையல் கூடம் கட்டப்பட்டுள்ளது. எங்கள் நிலம் பயிரிட்ட போது நல்ல வருமானம் ஈட்டித் தந்தது , ‘எங்கள் நிலத்தை எங்களிடம் ஒப்படைத்தால் முன்பு போல் விவசாயம் செய்யலாம்’ என்ற எண்ணம் என் மனதில் எழுந்தது.போர்க்காலத்தில் மூவாயிரத்துடன் ஒரு மாதம் சாப்பிடலாம். இன்றைய நிலவரப்படி, காலையில் ஐயாயிரம், மாலையில்…
