அவருடைய புகைப்படத்தை வைத்து தினமும் அழுகிறேன் – மகேந்திரன் விஜயகுமாரி
எனக்கு 6 குழந்தைகள். மூத்தவர் மகேந்திரன் மகாநஹாசன். அவர் மின்னியல் வல்லுநர்ராக இருந்தார். அப்போது அவருக்கு வயது 27. அது 2007 பிப்ரவரி மாதம். நண்பரின் திருமணத்திற்கு உதவுவதற்காக மதியம் 1.30 மணியளவில் எனது மகன் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டான். அவர் திரும்பிக் கொண்டிருந்தபோது இராணுவத்தினர் அவரைப் பிடித்து தங்கள் வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். அவரை எல்லா இடங்களிலும் தேடினோம். அவரைப் பற்றி தினமும் நினைத்துக் கொண்டே வாழ்கிறோம். எனது மகனைத் தேடி நான் சந்தித்த நபர்கள்…
