அவரை மறக்கச் சொன்னார்கள். ஆனால் நான் எப்படி மறக்க முடியும்? – பேரின்பராசா பேரேஸ்வரி
எங்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். ஜனவரி 8, 2007 அன்று என்னுடைய இளைய மகளுக்கு 02 வயது. அவளுடன் காலையிலிருந்து விளையாடிவிட்டு எனது கணவர் (நடராசா பெரம்பராசா) மதியம் 1 மணியளவில் வீட்டை விட்டு வெளியேறினார். வவுனியாவுக்குச் சென்று, இந்த வீட்டைக் கட்ட கடன் வாங்கியிருந்த அவர், தவணை செலுத்தி உரம் வாங்கித் வருவதாகக் கூறி மோட்டார் சைக்கிளில் பக்கத்து வீட்டுக்காரருடன் சென்று, வீடு திரும்பிக் கொண்டிருந்த போது ஈச்சங்குளத்துக்கும் கல்மடுவுக்கும் இடையில் வைத்து கடத்தப்பட்டுள்ளனர். வேலை…
